Kolli hills- 3 ways- which way is the best?

If you use android phone and chrome browser click 3 dots at top right corner of chrome browser. See translate option within it. Use it for translation for any language you desire.

Way 1:
Namakkal - solakkad route(search for km in Google maps)

நாமக்கல் - சோளக்காடு பாதை(verify km in Google maps)

இந்த சோளக்காட்டில் இருந்து ரோடு  நேராக ஒன்றும் இடது புறம் ஒன்றும் செல்லும். 

சோளக்காட்டில் இருந்து நேராக செல்வது:

சோளக்காட்டில் இருந்து நேராக செல்வது செம்மேடு என்ற ஊரை அடைவதற்கு சில மீட்டர்கள் முன்பாக இடதுபுறம் ஆகாய கங்கை அருவிக்கு திரும்பும். அந்தப் பாதையில் நடுவில் பூந்தோட்டம் என்ற ஊர் வரும். அந்த point முக்கியமானது. நினைவில் வைக்கவும்.
அதில் இடது புறம் திரும்பினால் ஓலையாறு என்ற பஸ் ஸ்டாப் வரும். இதில் இடதுபுறம் இரண்டு கிலோ சென்றால் மாசிலா அருவியை பார்க்கலாம். பார்த்துவிட்டு திரும்பி  பஸ் ஸ்டாப்பிற்கு வரவேண்டும். ஓலையாறு பஸ் ஸ்டாப்பில் இருந்து இடது புறம் செல்வது தேனூர் பட்டிக்கு செல்லும். தேனூர் பட்டியிலிருந்து மலையை விட்டு கீழே இறங்கி சேரடி, வாழைக்கோம்பு  வழியாக தம்மம்பட்டிக்கும் துறையூருக்கும் நடுவில் மெயின் ரோடு அடையலாம். 
இடதுபுறம் திரும்பி தம்மம்பட்டியை தாண்டி ஆத்தூருக்கு போகலாம். அங்கிருந்த இடதுபுறம் திரும்பினால் சேலம் . ஆத்தூரில் இருந்து வலது புறம் திரும்பினால் மெட்ராஸ், பாண்டிச்சேரி.

தேனூர்பட்டியில் இருந்து கீழே இறங்காமல் நேராக சென்றால் சோலை காட்டை அடையலாம். அங்கிருந்து மீண்டும் நாமக்கல்லுக்கு மலையை விட்டு கீழே இறங்கலாம். தேனூர்பட்டிக்கும் சோலை காட்டிற்கும் நடுவில் தேனூர்பட்டியில் இருந்து நாலு கிலோ மீட்டர் சென்றால் குழிவளவு என்ற ஊர் வரும். இந்தக் குழி வளவு என்ற ஊரிலிருந்து , செங்கரை, மேக்கனிக்காடு, நரியங் காடு வழியாக மலையை விட்டு கீழே இறங்கி தரையில் உள்ள முள்ளுக்குறிச்சி என்ற ஊரை அடையலாம். முள்ளுக்குறிச்சியில் இருந்து தம்மம்பட்டி வழியாக துறையூர் ஐ அடையாளம்.

செம்மேடிற்கு சென்றால் அங்கிருந்து வாசலூர்பட்டி ஏரி வழியாக விளாரம் சென்று அங்கிருந்தும் ஆகாய கங்கை அருவி உள்ள அறப்பளீஸ்வரர் கோயிலை அடையலாம். இந்தப் பாதை மிக அழகானது. பிரம்மாண்டமான பள்ளத்தாக்குகள் தெரியும். முட்டாள் டூரிஸ்டுகள் குறிப்பிட்ட சில இடங்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். கொல்லிமலை என்று இல்லை எந்த மலைக்கு சென்றாலும் அந்த மலையில் உள்ள அத்தனை ரோடையும் சுத்தி பார்க்க வேண்டும். எங்கே எந்த அதிசயம் உள்ளது என தெரியாது. மலையில் உள்ள எல்லா சாலைகளுமே பார்க்க வேண்டிய இடங்கள் தான். ஏதோ ஒரு அருவியோ, ஏதோ ஒரு viewpoint ஓ, ஏதோ ஒரு lake ஓ
அ ல்ல.


சோளக்காட்டில் இருந்து இடது புறம் திரும்புவது:
சோளக்காட்டில் இருந்து இடது புறம் திரும்புவது குழி வளைவை அடையும்(அங்கிருந்து மலையை விட்டு கீழே இறங்குவது எப்படி என மேலே எழுதி உள்ளேன்). குழிவளைவைத் தாண்டி தேனூர்பட்டியை அடையலாம். அங்கே ரோடு நேராக மேலேயும் இடதுபுறம் கீழேயும் செல்லும். கீழே செல்லும் வழியாக துறையூருக்கும் தம்மம்பட்டிக்கும் நடுவில் மெயின் ரோடு ஐ அடையலாம்(இதைப் பற்றி மேலே எழுதி உள்ளேன்). நேராக சென்றால் ஆகாய கங்கை அருவியை அடையலாம். சோளக் காட்டில் இருந்து இடதுபுறம் திரும்பும் இந்த சாலையில் சில அடிகள் சென்றால் முதலில் வலது புறம் ஒரு ரோடு திரும்பும். அதில் சென்றால் நம்ம அருவியையும் மாசிலா அருவியை உம் அடையலாம்.

Way 2:
Thuraiyur- valai kombai pirivu- seradi- thenur patti - arapaleeswarar Kovil route

(Thuraiyur 39km valaikombai pirivu 30 km thenur patti more or less 20km arapaleeswarar Kovil)

துறையூர், வாழைக் கோம்பை பிரிவு(in between தம்மம்பட்டி மற்றும் துறையூர்), வாழைக் கோம்பை, சேரடி, தேனூர் பட்டி பாதை

  

Way 3:
Thuraiyur 39km valaikombai pirivu junction 1km thamampatti 10km mullukurichi 60km arapaleeswarar Kovil

(In between mullukurichi and arapaleeswarar Kovil the path is nariyangadu, mekkanikadu, padasolai, sengarai, kuzhivalavu...this path is heaven)

In tamil:
துறையூர், வாழைக் கோம்பை பிரிவு, தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி, நரியங் காடு, மேக்கனிக்காடு, படசோலை, செங்கரை, குளிவளைவு பாதை


If you turn right from kuzhivalavu you will reach solaikadu within few minutes. If you turn left from kuzhivalavu you will reach thenur petti at 4km..from thenur patti, if you go down you will reach valai kombai pirivu junction in between thamampatti and thuraiyur. From thenur patti, if you go straight you will reach arapaleeswarar Kovil having agayagangai waterfalls)



இதில் அதிசயம் என்றால் இரண்டாவது வழியும் மூன்றாவது வழியும் தான். 
கொடைக்கானல் எல்லாம் இந்த இரண்டு பாதைகளோடு ஒப்பிட்டால் தாழ்ந்ததுதான்.


முதல் பாதையான நாமக்கல் வழியாக சோலைக்காடு பாதையில் செல்லவே கூடாது.