In tamil: an idea of a monk- who should you marry?
ஒரு சாமியார் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.
வயது ஆகி விட்டது.
அவரது சிஷ்யர் ஒருவர் 20 வயது இருக்கக்கூடிய தன் பையனையும் தன் மகளையும் அழைத்து வந்தார். வாழ்க்கைத் துணையை தேடுவது பற்றி ஏதாவது இவர்களுக்கு சொல்லுங்கள் என்றார்.
பையனை அழைத்தார் சாமியார்.
பெண் அழகாக இருக்கிறாளா என்று பார். போதும் என்றார்.
பெண்ணை அழைத்தார்.
அவளோ நான் மிகவும் நல்லவனாக உள்ளவனை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றாள். எப்படி அவனை கண்டுபிடிப்பது என்றாள்?
வெள்ளை நிறத் தாள் போல் முழு நல்லவனாக ஒருவன் உனக்கு தெரிந்தால் அவன் அறிவற்றவன் என தெரிந்து கொள்... அறிவின் துணை இன்றி ஒருவன் சிக்கலான விஷயங்களில் நல்லவனாக நடந்து கொள்ள முடியாது. களவும் கற்று அறிந்தவனால் தான் சிக்கலான விஷயங்களை கூட புரிந்து கொள்ள முடியும். ஆக எவன் ஒருவன் சில விஷயங்களில் கொஞ்சம்
கெட்டவனாகவும் உள்ளானோ அவன் தான் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட முடிந்தவரை நல்லவனாக செயல்பட முடியும் என்றார்.
அவளோ அவனை எப்படி நான் கண்டுபிடிப்பது என்றாள்.
உனக்கு யாரைப் பிடித்து இருக்கிறதோ அவனை உடனே நம்பி விடாதே.
உனக்கு பிடிக்காத படிக்கு ஏதாவது ஒருவன் செய்தால் அவனோடு தொடர்ந்து பழகிப் பார் என்றார்.