Number 1 keyboard to type tamil via english for windows and for android
Number 1 keyboard to type tamil via english in laptop(having windows OS):
To type tamil via english in laptop running in windows operating system download nhm writer or azhagi software... Nhm writer is the best to type tamil via english in laptop running in windows operating system...
Number 1 keyboard to type tamil via english in android phone in the past:
Number 1 keyboard to type tamil via english in android phone is azhagi keyboard...but it is not working now in android phone's latest OS. Azhagi keyboard has not been updated. So we can't use azhagi keyboard now.
Yet, I am telling about azhagi keyboard for those who use old android phone having old android operating system.
2 main pluses of azhagi keyboard:
1. Azhagi keyboard layout size, keys' size, distance in between keys are very comfortable to type letters...so we will type letters easily...also we will not press any wrong adjacent keys...
2. Azhagi keyboard types tamil via english 100% accurately in android phone...but you must do the below said changes in settings in your android phone to type tamil via english 100% accurately in android phone while using azhagi keyboard.
After installing azhagi keyboard in your android phone go to settings in your android phone.
Find language & input.
(It is present in my android phone in system at the bottom within settings)
Put tick mark in azhagi
Above to it enable default keyboard as azhagi.
Now click azhagi.
Azhagi settings will open.
Click languages.
Disable use system language.
In active input methods choose english and தமிழ்- எழுத்துப்பெயர்ப்பு..
No need to change anything in preferences.
In appearance and layout choose theme as material light or material dark.(i like material dark)
Dont choose holo white or holo blue(அவற்றில் keys shape வேறு மாதிரி இருக்கும். வேண்டாம்).
Below one is the change we should do to get rid of any error in tamil typing via english in azhagi keyboard.
Click text correction.
Within it turn off everything. Dont forget to turn off autocorrection too. Because the button to disable autocorrection is visible only after clicking the auto correction.
Also put tick mark in google voice typing. Choose தமிழ்(இந்தியா) and english(india)...download english(india) for offline english voice typing...tamil voice typing is possible only when u have internet data turned on...
Practise these for 1 month:
உயிர் எழுத்துக்கள்:
அ- a
ஆ- aa or hold shift key and press a (upward arrow in keyboard in android phone is shift key)
இ- i
ஈ- ii or hold shift key and press i
உ- u
ஊ- uu or hold shift key and press u
எ- e
ஏ- ee or hold shift key and press e
ஐ- ai
ஒ- o
ஓ- oo or hold shift key and press o
ஒள- press o then hold shift key and press l(எல்) and release shift key and press a (dont press au. I am telling this for a reason)
ஃ- q
மெய் எழுத்துக்கள்:
க்- k
ங்- ng
ச்- s
ஞ்- nj
ட்- t in all apps but d in sellinam keyboard got from playstore
ண்- hold shift key and press n
த்- th in all apps but t or th in sellinam keyboard got from playstore
ந்- w
ப்- p
ம்- m
ய்- y
ர்- r
ல்- l (எல்)
வ்- v
ழ்- z
ள்- hold shift key and press l (எல்)
ற்- hold shift key and press r
ன்- n
Some examples to type some உயிர்மெய் எழுத்துக்கள்:
க- ka
கா- kaa or press k then hold shift key and press a
கி- ki
கீ- k then hold shift key and press i
கு- ku
கூ- k then hold shift key and press u
கெ- ke
கே- k then hold shift key and press e
கை- kai
கொ- ko
கோ- k then hold shift key and press o
கௌ- ke then hold shift key and press l (எல்) and release shift key and press a (dont press kau. I am telling this for a reason)
Other உயிர்மெய் எழுத்துக்களும் இப்படியே தான்.
Some other letters:
ஜ்- j
ஷ்- sh
ஸ்- hold shift key and press s
ஹ்- h
க்ஷ்- ks then hold shift key and press h (but in sellinam keyboard got from playstore க்ஷ் cannot be written)
ஸ்ரீ- hold shift key and press s and release fingers from both of them then press ri (but in sellinam keyboard got from playstore press sri and choose ஸ்ரீ from suggestions shown at the top of the keyboard).
Last note:
Number 2 keyboard to type tamil via english in android phone is sellinam keyboard by muthu nedumaran...but it has 2 drawbacks...its key layout size is not comfortable to type letters...also, to type ட் we should click d in sellinam keyboard...but in all other keyboards to type ட் we should click t...so, in sellinam keyboard, we often mistakenly press t for ட் instead of pressing d for ட்...for these 2 problems i uninstalled sellinam keyboard from my android phone...
Number 3 keyboard to type tamil via english in android phone is ezhuthani keyboard
by c v raju...it types accurately...but key layout size is not comfortable to type letters...so we will mistakenly press wrong adjacent keys...
microsoft swiftkey keyboard is useless regarding typing tamil via english in android phone...because typing a particular key doesn't type a very particular tamil letter in Microsoft swiftkey keyboard.
Some other keyboards available in playstore store are useless regarding typing tamil via english.
About Gboard tamil voice typing:
Gboard tamil voice typing requires internet connection.
ஆண்ட்ராய்டு போனில் அழகி என ஒரு கீ போர்டு கடந்த காலத்தில் இருந்தது.
https://www.azhagi.com/aa.php
ஆங்கிலத்தில் டைப் அடித்தால் தமிழுக்கு மாற்றும். இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு போன் ற்கு ஏற்ப update செய்யப்படவில்லை. நேரமில்லை என அதன் வெப்சைட்டில் போட்டு இருக்கிறார்கள்.
இதில் நான் டைப் அடித்தால் 99% சரியாக தமிழ் எழுத்து விழும்.
சரியாக டைப் அடிப்பது மட்டும் இல்லை. Keys களின் அளவு, அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளி , layout size எல்லாமே அழகி கீ போர்டில் சரியாக இருக்கும்.
இப்போது இருக்கும் எந்த கீ போர்டும் அழகி போல் இல்லை.
Android phone இல் பல தமிழ் via english கீ போர்டுகளை test செய்து பார்த்துவிட்டேன்.
இப்போதைக்கு best என்றால் Gboard tamil voice typing ஒன்று மட்டுமே.
Gboard tamil voice typing இல் பிழைகள் வருகின்றன. ஆனால் நிறைய பிழைகள் வராது.
ஜெமினி ai இடம் கேட்டதற்கு வரும் காலத்தில் இந்த பிழைகள் இல்லாமல் ஆகி விடுமாம். Google company gboard இல் தமிழ் voice typing ஐ மேம்படுத்த ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறதாம்.
எழுத்தாணி என ஒரு கீபோர்ட்(in playstore) உள்ளது.
அழகி கீ போர்டுக்கு அடுத்தபடியாக அது தமிழை ஆங்கில எழுத்து வழியாக சரியாக டைப் அடிக்கிறது. ஆனால் தேவையில்லாத சில keys களை அதில் சேர்த்து உள்ளார்கள். டைப் அடிக்கும் போது விரல் தவறுதலாக வேறு keys களில் படுகிறது.
Gboard இல் keys களை விரலால் அழுத்தி தமிழை டைப் செய்யலாமே என உங்களுக்கு தோன்றும். அது முறையான ஆங்கில வழி தமிழ் டைப் இடும் முறை அல்ல. ஆனால் Gboard இல் விரலால் type அடித்தால் பிழைகள் வரும். ஆனால் நிறைய பிழைகள் வராது. நிறைய correction களை செய்ய வேண்டி இருக்கும். ஆனால் microsoft swiftkey keyboard மற்றும் playstore இல் உள்ள மற்ற கீ போர்டுகளோடு ஒப்பிட்டால் Gboard இல் உள்ள keys களை விரலால் அழுத்தி டைப் அடித்தால் பிழைகள் குறைவாக வரும்.
இந்த பட்டனை தொட்டால் இந்த எழுத்து மட்டுமே தான் வரும் என Gboard இல் இல்லை.
இப்போதைக்கு பிழைகள் வந்தாலும் பரவாயில்லை என Gboard tamil voice typing ஐ யே உபயோகிக்க வேண்டும் போல. சீக்கிரமும் பேசி முடித்து விட முடிகிறது. ஏற்படும் பிழைகளை கடைசியாக Gboard இல் keys களை அழுத்தி typing மூலம் சரி செய்ய வேண்டும். முழு கட்டுரையையும் பேசி முடித்த பிறகு பிழைகளைப் படித்துப் பார்த்து typing மூலம் சரிசெய்ய சோம்பேறித்தனமாக உள்ளது.
Gboard tamil voice typing tips:
Gboard வாய்ஸ் டைப்பிங் பயன்படுத்துவது எப்படி?
நீங்கள் Gboard-ல் உள்ள மைக்ரோஃபோன் ஐகானை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனியாக "Gboard வாய்ஸ் டைப்பிங்" என்று ஒரு ஆப்ஷன் இருந்தால், அதை உபயோகிக்க வேண்டாம். அந்த ஆப்ஷனில் தமிழில் பேசிக்கொண்டிருக்கும்போது ஆங்கிலத்திற்கு மாற வேண்டுமென்றால், கீபோர்டுக்கு மீண்டும் வர வேண்டி இருக்கும். இது நேர விரயம். Gboard-ல் உள்ள மைக் ஐகான் இதைத் தவிர்க்கிறது.
வாய்ஸ் டைப்பிங்கில் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?
Gboard-ல் தமிழ் வாய்ஸ் டைப்பிங் பயன்படுத்தும்போது பிழைகள் வராமல் இருக்க ஒரு எளிய வழி இருக்கிறது:
முழு வாக்கியத்தையும் மனதில் யோசித்துவிட்டு, அதன் பிறகு யோசித்த முழு வாக்கியத்தையும் திக்காமல், தெளிவாகப் பேசிவிடுங்கள். தனியாக ஒரு வார்த்தையை மட்டும் பேசினால், Gboard-க்கு அதன் 'context' புரியாததால் பிழைகள் வரலாம். ஆனால், அதே தமிழ் வார்த்தையை ஒரு முழு வாக்கியத்தில் பேசும்போது, Gboard 'context'-ஐப் புரிந்துகொண்டு சரியான வார்த்தையை பிழையில்லாமல் டைப் செய்யும்.
நான் இதை இன்றுதான் கண்டுபிடித்தேன். ஒரு வார்த்தையை தனியாகச் சொன்னபோது பிழை வந்து கொண்டே இருந்தது. அதே தமிழ் வார்த்தையை அர்த்தமுள்ள ஒரு முழு வாக்கியத்தில் பேசியபோது அது சரியாக டைப் ஆனது. Gboard 'context'-ஐப் பயன்படுத்துகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
திருத்தங்கள் மற்றும் அகராதி சேர்த்தல்:
வாய்ஸ் டைப்பிங்கில் பிழைகள் ஏற்பட்டால், நீங்கள் பேசிய பிறகு ஆங்கில வழியில் தமிழை டைப் செய்து திருத்தங்களைச் செய்யலாம்.
மேலும், Gboard-ல் நீங்கள் பேசக்கூடிய சில வார்த்தைகளுக்குக் கீழ் சிவப்புக் கோடு விழும். அந்த வார்த்தையைத் தொட்டு "Add to dictionary" என்பதைத் தேர்வு செய்யுங்கள். இது Gboard அந்த வார்த்தையை எதிர்காலத்தில் சரியாக அடையாளம் கண்டுகொள்ள உதவும்.
அழகி கீபோர்டும் Gboard-ம்:
முன்பு நான் அழகி கீபோர்ட் பற்றி சொல்லியிருந்தேன். அழகி கீபோர்டில் ஆங்கில வழியில் தமிழ் டைப் செய்ய, எந்த ஆங்கில எழுத்தைத் தொட்டால் எந்தத் தமிழ் எழுத்து வரும் என்பதைப் பயிற்சி செய்ய வேண்டும். Gboard அப்படிப்பட்ட பயிற்சி எதுவும் தேவையில்லை. பயிற்சி எடுக்காதவர்களுக்கும் எளிமையாகப் பயன்படுத்தும் விதத்தில் Gboard உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், Gboard-ல் டைப் செய்யும்போது பிழைகள் வர வாய்ப்புள்ளது. அழகி கீபோர்டில் டைப் செய்தால் பிழைகள் வராது. ஆண்ட்ராய்டு போனில் வேறு கீபோர்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் பரிந்துரைக்கிறேன். நான் பல வேறு கீபோர்டுகளை முயற்சி செய்து பார்த்துவிட்டேன். Gboard சிறந்த அனுபவத்தைத் தருகிறது.
Note:
Gboard இல் உள்ள keys களை விரலால் அழுத்தி ஆங்கில வழியில் தமிழை டைப் அடிக்க மேலே நான் எழுதியுள்ள practice these for 1 month என்ற தலைப்பிற்கு கீழ் உள்ள எழுத்துக்களை பயிற்சி செய்ய வேண்டாம். அது அழகி கீ போர்டு, எழுத்தாணி கீபோர்டு, செல்லினம் கீபோர்டு போன்ற கீபோர்டுகளில் பயன்படுத்தத் தான் தான் . மேலும் practice these for 1 month என்ற தலைப்பிற்கு கீழ் உள்ளவற்றை கற்றால் கம்ப்யூட்டரில் nhm writer ஐ பயன்படுத்தி 99.5% பிழையே இல்லாமல் தமிழை ஆங்கில வழியில் டைப் செய்ய முடியும்.
My way:
நான் கம்ப்யூட்டரில் nhm writer மூலம் டைப் செய்வேன். Android phone இல் இப்போதைக்கு Gboard tamil voice typing ஐ use செய்கிறேன். பிழைகள் வரும். ஆனால் நிறைய பிழைகள் வராது. கடைசியாக Gboard இல் உள்ள keys களை விரலால் அழுத்தி பிழைகளை சரி செய்கிறேன்.